Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 15 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
இலங்கை அரசானது மக்கள் பற்றி சிறிதும் சிந்திக்காது எமது பிரதேசத்தின் வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதால், தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் பிரான்சிஸ் ஜோசப் தெரிவித்தார்.
மன்னார், பூநகரியில் இரண்டு பாரிய அளவிலான மீள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்துக்கு இந்தியாவின் அதானி குழுமத்துக்கு ஒதுக்கீடு செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை கைச்சாத்திட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.
இது தொடர்பில் நேற்று (14) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று எரிபொருள் இன்மை காரணமாக மட்டுப்படுத்திய தொழிலை எமது தொழிலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை தோண்றியுள்ளது.
“குறிப்பாக, 40 கடல் மைல்களுக்குச் சென்று தொழில் செய்யவேண்டிய தொழிலாளர்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதில்லை. குறைந்த அளவு எரிபொருளைக் கொண்டு ஒரு சில மீனவர்கள் மாத்திரமே தற்போது தொழிலுக்குச் சென்று வருகின்றனர். ஏனைய மீனவர்கள் தொழிலுக்குச் செல்வதில்லை.
“பூநகரி பிரதேசத்தில் இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு தொடர்ந்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற போதும், இதுவரை மக்கள் பற்றி சிந்திக்காத அரசாங்கம் இப்போது இவ்வாறு இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பமிட்டதாக அறிகின்றோம்.
“இத்திட்டத்தால் எதிர்காலத்தில் கடற்தொழில் பாதிக்கப்படும். அதேபோல கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படும். இந்த அரசு எதைச் செய்தாலும் மக்கள் பற்றி சிந்திப்பதில்லை” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago