2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

போதையூட்டும் மாத்திரைகளுடன் இளைஞன் கைது

Freelancer   / 2022 மே 13 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதையூட்டும் 300 மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மல்லாகம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞனை கைது செய்த பொலிஸார், அவரது உடைமையில் இருந்து போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.   (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .