Janu / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் மது போதையில் விசாரணைக்கு இடையூறு செய்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்திற்கு மதுபோதையில் சென்று நீதிமன்ற அமர்வில் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் குறித்த நபரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது சந்தேக நபரை செவ்வாய்க்கிழமை (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறும் சந்தேக நபருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
11 minute ago
11 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
11 minute ago
32 minute ago