2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

போதைப்பாக்குடன் பாடசாலை சென்ற மாணவன் கையை அறுத்துக்கொண்டான்

Freelancer   / 2022 ஒக்டோபர் 22 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

போதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன், தனது கையினை பிளேட்டால் அறுத்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தெல்லிப்பளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

குறித்த மாணவன் போதை ஊட்டிய பாக்குடன் பாடசாலைக்கு வருகை தந்துள்ளார். அது தொடர்பில் அறிந்து கொண்ட ஆசிரியர்கள் மாணவனிடம் விசாரணைகளை முன்னெடுத்து பாக்கினையும் மீட்டு இருந்தனர். 

அதனை அடுத்து அதிபர் ஊடாக அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்த போது , குறித்த மாணவன் தனது கையினை வெட்டி காயப்படுத்தி உள்ளான்.

காயத்திற்கு உள்ளன மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

மாணவனுக்கு எங்கிருந்து பாக்கு கிடைத்தது ? பாடசாலைக்கு அருகில் யாரேனும் விற்பனை செய்கின்றார்களோ ? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .