2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் கொண்டு வந்த நீதிமன்ற கட்டளையை ஏற்க மறுத்த எம்.பி

Freelancer   / 2023 பெப்ரவரி 15 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நீதிமன்றம் வருகை தருமாறு கூறும் பொலிஸ் கட்டளையை நேற்று (14) பொலிஸார் வழங்கியிருந்தனர்.  

அந்தக் கட்டளை  சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன் காரணமாக, சிங்கள மொழி தனக்கு வாசிக்கத் தெரியாது எனவும் ஆகவே, கட்டளையைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழில் கொண்டு வந்து தருமாறு கூறி, பொலிஸாரிடதே தனை மீளக் கையளித்தார் எம்.பி.

பின்னர் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து கொண்டு வந்து கொடுத்தபோது, நீதிமன்றத்துக்கு தன்னை வருவதற்கு அழைக்கும் அழைப்பை நீதிமன்றம் தான் வழங்கமுடியுமே தவிர, நீதிமன்றத்துக்கு அழைக்கும் அழைப்பை பொலிஸாரால் வழங்கமுடியுமா என பாராளுமன்ற உறுப்பினர் வினவிய போது, பொலிஸார் அமைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X