2025 ஏப்ரல் 14, திங்கட்கிழமை

’’பொதுவேட்பாளர் சாத்தியமற்றது’’

Editorial   / 2024 ஏப்ரல் 09 , பி.ப. 08:31 - 0     - 131

எஸ்.நிதர்ஷன் 

பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றது என  தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலை வருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ் கல்வியங்காட்டிலுள்ள தனது அலுவலகத்தில்  செவ்வாய்க்கிழமை (09) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது..

எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்பது தொடர்பாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த விடயம் சம்பந்தமாக எங்களுடைய கட்சி ஒரு கட்சியாக இன்னமும் கலந்துரையாடி ஒரு முடிவிற்கு வரவில்லை. ஆனால் தனிப்பட்ட வகையில் என்னைப் பொறுத்தவரையில் இது எவ்வாறாயினும் நடைமுறைச் சாத்தியமாகாது.  

பொது வேட்பாளரை தேடிப் பிடிபதற்குள்ளேயே முரண்பாடு பல வந்து சேரும். ஏற்கனவே நிலைமைகள் அப்படித் தான் இருக்கிறது. ஆகவே தனிப்பட்ட வகையில் என்னுடைய கருத்து என்னவுனில் பேரம் பேச வேண்டிய சூழ்நிலைக்கு  ஒற்றுமையாக பலமாக நாங்கள் இருக்க வேண்டும். அந்தப் பலத்தோடு நாங்கள் பேரம் பேசலாம். 

ஆனால் ஒரு பொது வேட்பாளர் என்றால் ஏனைய வேட்பாளர்களோடு நாங்கள் சமநிலையில் நிற்கிற பொழுது சில சமயங்களில் எங்களது பேரம் பேசும் பலம் குறைவாக இருக்கலாம்.  அல்லது அவர்கள் எங்களடு பேரம் பேசாமலும் போகலாம். 

இவ்வாறான சூழல்களும் இருப்பதாலே என்னுடைய தனிப்பட்ட கருத்து இது ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்வதிலேயே முடங்கி விடும். அல்லது சாத்தியமற்றதாக அமையும். அது பிரதேச வாதங்களுக்கு இடங்கொடுக்கக் கூடிய வாய்ப்பாகவும் அமையும். வேட்பாளரை தெரிவு செய்வதிலேயே முடங்கி விடும். அல்லது சாத்தியமற்றதாக அமையும். 

பொது வேட்பளர் தெரிவிற்கு எந்த கட்சி என்ற விடயத்தில் பூச்சுக்களுக்குற் இடங்கொடுக்க கூடும். ஆகவே எல்லா விடயத்திலயும் பார்க்கிற பொழுது இது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.  ஆனாலும் கட்சி இனி கலந்து பேசி முடிவிற்கு வரலாம். அதன் பிறகு அதனோடு நாங்கள் உடன்படுவதோ இல்லையா என்பதையும் தீர்மானிக்கலாம் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X