2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்

Editorial   / 2022 நவம்பர் 06 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம். றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்துள்ளார். 

கொடிகாமம் மீசாலை பகுதியை சேர்ந்த குகதாசன் விமல்ராஜ் , (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு பேருந்தில் சுற்றுலா சென்று மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை முகமாலை இத்தாவில் பகுதியில் பேருந்தில் இருந்து குறித்த நபர் தவறி விழுந்துள்ளார். 

அதில் படுகாயமடைந்த நபரை , பளை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை மாற்றப்பட்டார் எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .