Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 நவம்பர் 28 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத், எம். றொசாந்த்
விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உருவப்படம் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரொருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார்.
கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே, செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் திங்கட்கிழமை மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் படம் பொறித்த ஆடை அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபரிடம் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக அறிய முடிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago