2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

Mayu   / 2024 ஜூலை 22 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசிய கட்சிகளுக்கும். தமிழ் மக்கள் பொதிச்சபைக்கும் இடையேயான புரிந்துணர்வு  ஒப்பந்தம் திங்கட்கிழமை (22) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தந்தை செல்வா அரங்கில்  காலை 11:30  மணியளவில் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில்  இடம்பெற்றது.

தமிழ் மக்கள் பொதுச்சபையின்  செயற்பாட்டாளர் பேராசிரியர் K.T. கணேசலிங்கம்  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கட்சிகள் சார்பில். பாராளுமன்ற உறுப்பினரும். தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்  செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கம் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சிகள் சார்பில் அதன் தலைவர் வேந்தன்,  பசுமை தேசிய இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஐங்கரநேசன், தமிழ் தேசிய  கட்சி சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்தா. புளொட்  சார்பில் அதன் தலைவர் சித்தார்த்தன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர்  கையொப்பமிடப்பட்டனர்.

தமிழ் மக்கள் பொதுச் சபை சார்பில்  பேராசிரியர் கே ரீ கணேசலிங்கம்,  அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான  சி.ஆ.யோதிலிங்கம். அரசியல் விமர்சகர் நிலாந்தன், திரு.வசந்தராசா, ஆய்வாளர் யசீந்திரா உட்பட பலரும் கையொப்பமிட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .