2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

புத்தூரில் விபத்து ; அச்சுவேலி இளைஞன் உயிரிழப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 13 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

சாவகச்சேரி - புத்தூர் வீதியூடாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, வீதியின் குறுக்காக இரும்பு கூட்டினை கொண்டு சென்றவர்களுடன் மோதுண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியை சேர்ந்த விஜயரத்தினமூர்த்தி டுவிசன் (வயது 20) என்பவரே உயிரிழந்துள்ளார். 

கடந்த திங்கட்கிழமை அச்சுவேலியில் இருந்து தனது நண்பனுடன் கொடிகாமத்திற்கு சென்று விட்டு , சாவகச்சேரி - புத்தூர் வீதியூடாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்  உயிரிழந்துள்ளார்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .