2025 மார்ச் 31, திங்கட்கிழமை

புகையிலை கன்றுகளுக்குள் நின்ற கஞ்சா செடி

Freelancer   / 2025 மார்ச் 28 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவான் பகுதியில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புன்னாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் புகையிலை தோட்டத்தில் , புகையிலை கன்றுகளுக்கு மத்தியில் மிக சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கஞ்சா செடியை கைப்பற்றினர்.  

மீட்கப்பட்ட கஞ்சா செடி சுமார் 4 அடி உயரம் எனவும், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சுன்னாக பொலிஸார் சந்தேக நபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X