2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

புகையிரதத்துடன் மோதி வயோதிபர் உயிரிழப்பு

Freelancer   / 2022 ஒக்டோபர் 08 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - அரியாலையில் புகையிரதத்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த போல் தனஞ்சயன் (வயது -78) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

வியாபார நோக்கமாக துவிச்சக்கர வண்டியில் அரியாலையில் ஏவி வீதியில் சென்ற பொழுது பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றது.

வயோதிபருக்கு ஏற்கனவே ஒரு கண் பார்வையில்லாமலும் காது கேட்காத நிலையிலும் கடவையை கடக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .