2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பிரித்தானியாவிலிருந்து வந்தவருக்கு அதிர்ச்சி

Freelancer   / 2022 மே 02 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

பிரித்தானியாவிலிருந்து வந்த ஒருவரின் வீட்டில்  திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உரும்பிராய் - தெற்கு பகுதியில் இந்த திருட்டுச் சம்பவம் நேற்று மதியம் 12 மணிக்கும் 1 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஒரு பவுன் காப்பு, ஒன்றரை பவுன் சங்கிலி, ஒன்றரை பவுன் தோடு ஒரு சோடி, மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் என்பன திருட்டு போயுள்ளது. 

பிரித்தானியாவிலிருந்து நேற்றைய தினம் வந்து ஒரு சில மணிநேரங்களுக்குள் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது. 

மகன் கடைக்கு சென்ற நேரம் பார்த்து தாய் பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளார். இதனை அவதானித்த திருடர்கள் துணிகரமாக நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விரிவான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .