2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பிரபாகரன் தொடர்பான அறிவிப்பு நிதி கேரிப்புக்காக மட்டுமே

Freelancer   / 2023 மார்ச் 01 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

தனது குடும்பதையே ஒரு இனத்திற்காக அர்ப்பணித்த தம்பி பிரபாகரன் தொடர்பில் இவ்வாறு பொது வெளியில் பொய்யான கருத்துகளை வெளியிடுவது ஒரு போராட்டத்தை மலினப்படுத்தும் செயல் என்றும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெறுமனே நிதி கேரிப்புக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.R 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .