2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Princiya Dixci   / 2022 மார்ச் 15 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறில் உள்ள காட்டுப் பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம்  ஒன்றை பொலிஸார், இன்று (15) முற்றுகையிட்டனர்.

தருமபுரம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இந்தக் கசிப்பு உற்பத்தி நிலையம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது, 15 பெரல் கோடா, 65 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸ் விசாரணைகளின் பின்னர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .