Princiya Dixci / 2022 மே 18 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.தில்லைநாதன்
நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த/ வாக்களிக்காத மக்கள் என்ற பிரிவினை காட்டாது அனைவருக்கும் சிறந்த சேவை புரிவார் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் யாழ்.மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவி ஏற்றமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது நாடு பூராகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மூவின மக்களுக்கும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியை ஏற்றுள்ளார்.
“கிடைக்கப்பெற்றுள்ள பிரதமர் பதவியின் மூலம் மூவின மக்களுக்கும் இன, மத பேதமின்றி அவர் சேவையை புரிவார். பொதுமக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்றார்.
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025