2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

பஸ்ஸின் முன்சில்லு கழன்று விபத்து

Freelancer   / 2024 டிசெம்பர் 27 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

,இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின், ஒருபக்க  முன்சில்லு கழன்று ஓடியதால், அருகில் சென்ற பட்டாரக வாகனம் விபத்துக்குள்ளான சம்பவமொன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி,வௌ்ளிக்கிழமை (27) காலை சென்ற பஸ்ஸே, இவ்வாறு இயக்கச்சி இராணுவ முகாம் முன்பாக விபத்துக்குள்ளாகியது.

பஸ்ஸின் சாரதி பக்க சில்லின் அச்சு உடைந்து, சில்லு தீப்பிடித்து சென்றதில், அருகில் பயணித்த பட்டா வாகனத்தின் மீது பஸ்ஸின் சில்லு மோத, பட்டா சாரதி நிலைகுலைந்து, பட்டாவும் விபத்துக்குள்ளாகியது. 

பஸ் சாரதியின் சாமர்த்தியத்தால், பஸ் குடை சாயாமல் நிறுத்தப்பட்டு சேதங்கள் தடுக்கப்பட்டன.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .