Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 செப்டெம்பர் 03 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
கல்வியங்காட்டு பகுதியில் பழ வியாபாரி ஒருவர், சனிக்கிழமை (02) பட்டப்பகல் வேளையில் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு கடத்தப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
தீவிர விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார், அதிகாலை கடத்தப்பட்ட நபர் கிளிநொச்சி பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (03) மீட்டதோடு கடத்தலுடன் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்த அறுவர் கைது செய்யப்பட்டனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் பழக் கடையில் இருந்து எடுத்துச் சென்ற சமையல் எரிவாயு சிலிண்டரும் மீட்கப்பட்டுள்ளது.
கனகாம்பிகை குளம், பரந்தன், கரடிப்போக்கு சந்தி பகுதியைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பழக்கடை வியாபாரி மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட பணத்தொகையை கடத்தல்காரர்களுக்கு, கொடுக்க வேண்டி இருந்த நிலையில், அந்த தொகையில் ஒரு தொகை பணம் கொடுத்த நிலையில் தற்போது ஒன்றரை இலட்சம் ரூபாய் கொடுக்க வேண்டி உள்ளதாகவும், அதனால் தான் இந்த கடத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அறுவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
1 hours ago