2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

பல்கலைக்கழக அலுவலர் மோசம்

Janu   / 2024 ஜூலை 18 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து சுமார் 06 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் கிழக்கு பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெரும் மோசடி ஒன்று நடைபெற்ற  நிலையில் , பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் .

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணொருவரை கைது செய்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவரை  வழிநடத்தி , மோசடிகளில் ஈடுபட்ட , கிழக்கு பல்கலைக்கழகத்தின் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதேவேளை முன்னதாக கைது செய்யப்பட்ட இளம் பெண் , பல்வேறு நபர்களிடம் இருந்து பெற்ற சுமார் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியினை பல்கலைக்கழக அலுவலரின் வங்கி கணக்கில் வைப்பிலிட்டுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் , சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .