2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பல திருட்டுக்களுடன் தொடர்புடைய நபர் சிக்கினார்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 28 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் வடக்கு பகுதியில் பல திருட்டுக்களுடன் தொடர்புபட்ட ஒருவரை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

அண்மைய நாட்க்களில் குப்பிளான் மற்றும் புன்னாலை கட்டுவன் பகுதிகளில்  நீர் இறைக்கும் மின் மோட்டார் இயந்திரங்கள், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் திருட்டு போனதாக முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன.

இந்த நிலையில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த விசேட தகவலுக்கு அமைய குப்பிளான் வடக்கு கம்பம் புலம் பகுதிக்கு விரைந்த யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரவினர் 7 துவிச்சக்கர வண்டிகள் , 4 மோட்டார், 2 எரிவாயு சிலிண்டர்களை கைப்பற்றியதோடு குறித்த திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 27 வயதான அதே பகுதியைச் சேர்ந்த இளைஞனை கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து 80 மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றினர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .