2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பருத்தித்துறையில் போராட்டம் நடத்த தடை

Niroshini   / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இன்று முதல் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே, இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பொது தொல்லையை ஏற்படுத்தல், கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.

பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகி கடும் ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராயந்த பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் காயத்திரி சைலவன்,  பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்று தடை உத்தரவு வழங்கி கட்டளை வழங்கினார்.

பேரணியில் பங்கேற்போர் பல மாவட்டங்கள் ஊடாக அங்குள்ளவர்களையும் இணைத்து வருவதனால், கொவிட் -19 தொற்றெ ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்த தடை உத்தரவு வழங்கப்படுவதாக, நீதவான் கட்டளையில் சுட்டிக்காட்டினார்.

 

 

இந்தப் போராட்டம் மூன்றாம் நாளான இன்று காலை திருகோணமலையில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. 

நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பொலிகண்டியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .