Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஜூலை 22 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையோரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருந்தொகையான பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறியவர்களை நம்பி பணத்தினை கொடுத்து ஏமார்ந்த மூவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர்.
மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை 10 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும், காத்தான்குடி பகுதியை சேர்ந்தவரும் தற்போது களுத்துறை பகுதியில் வசித்து வரும் பெண்ணொருவரை 25 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் , யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் தற்போது தெஹிவளையில் வசித்து வரும் நபரொருவரை 40 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டிலும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .