2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

பண மோசடி ; அரசியல் கட்சி அமைப்பாளர் கைது

Janu   / 2024 மே 12 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்றின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுளளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 9 50 000 ரூபாயை பெற்று மோசடி செய்ததாக  பாதிக்கப்பட்ட தரப்பினரால் யாழ்.மாவட்ட பெருநிதி குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமையவே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் , கைது செய்யப்பட்ட நபரை  பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X