Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 23 , பி.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிதர்ஷன்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களான குழந்தைகளுக்கான பால் பவுடர், அரிசி, பருப்பு, கோதுமை, மண்ணெய், டீசல் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுபாடு காரணமாக இலங்கையில் வாழும் மக்கள் பலர் தமிழகத்துக்கு அகதிகளாக படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
யுத்தகால இடம்பெயர்வுக்குப் பின்னர் தற்போது உணவுப் பஞ்சத்தால் பட்டினிச் சாவுக்கு பயந்து குழந்தைகளோடு மீண்டும் அகதிகளாக தனுஸ்கோடிக்கு மக்கள் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று (22) காலை முதல் இரவு வரை 16 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர் என இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பலர் அகதிகளாக தனுஸ்கோடிக்கு வரக்கூடும் என்பதால், சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த கடல் பாதுகாப்பு அதிகரிகள் திட்டமிட்டுள்ளதாக, அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago