Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஜூலை 19 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து, அம்பியூலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
படகில் மருத்துவ அதிகாரி, மருத்துவமாது உள்ளிட்டவர்களின் உதவியுடன் அப்பெண்ணை குறிக்கட்டுவான் இறங்குதுறை நோக்கி அழைத்து வந்துள்ளனர்.
இதன்போது அப்பெண் படகினுள் குழந்தையை பிரசவித்துள்ளார்.
தொடர்ந்து தாயையும் சிசுவையும் குறிக்கட்டுவான் அழைத்து வந்து , அங்கு தயார் நிலையில் இருந்த அம்பியூலன்ஸ் வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.
தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .