Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 நவம்பர் 10 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலகம் முன்பாக வெள்ளிக்கிழமை (10) காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்திய இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்துவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஐனாதிபதி மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கு மாவட்ட மேலதிக அரச அதிபர் ஊடாக மகஜரொன்றையும் கையளித்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago