2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நீரில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு

Freelancer   / 2022 நவம்பர் 18 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் செம்மணி குளத்தில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞர் நீண்ட நேர தேடுதலின் பின்னர் நேற்று (17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ். செம்மணிக் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் குளத்தில் நீராடியிருந்த நிலையில் நீரில் மூழ்கி நேற்று முன்தினம் (16) காணமல் போயிருந்தார்.

இக் குளத்தை அண்மித்த பகுதியில் வசித்து வருகின்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவரே காணாமல் போயிருந்த நிலையில், அப் பகுதி மக்கள் உட்பட பலரும் இணைந்து இரவிரவாக நீண்ட நேரம் தேடுதல் நடத்தியிருந்னர்.
 
இந்த நிலையில் நேற்று (17) மதியம் குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .