2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

’’நிகழ்ச்சி பிடிக்காவிட்டால் திட்டுங்கள்’’

Simrith   / 2023 செப்டெம்பர் 25 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (24) மாலை ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இதன்போது யாழ்ப்பாணத்தில் தான் நடாத்தவுள்ள இசை நிகழ்ச்சி தொடர்பாகவும் இலங்கையில் மேற்கொள்ளவுள்ள தனது செயற்பாடுகள் தொடர்பாகவும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

இது இலங்கையில் நான் செய்யவிருக்கும் முதல் இசை நிகழ்ச்சியாகும்.  இதனை சரியாக செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் இலவசம். அனைவரும் கண்டிப்பாக பங்கு பற்றுங்கள்.

அத்தோடு இந்த நிகழ்ச்சி உங்களுக்கு பிடித்தால் உங்களின் முழு ஒத்துழைப்பையும் தாருங்கள், நிகழ்ச்சி பிடிக்காவிட்டால் திட்டுங்கள் எனவும் குறித்த சந்நிப்பின் போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X