2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நல்லூர் சுற்று வீதிகள் இன்றுமுதல் பூட்டு

A.Kanagaraj   / 2023 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பு.கஜிந்தன்

நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போக்குவரத்து தடை எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி வரை நீடிக்குமென யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளைய தினம் (21) ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (20) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில்  போக்குவரத்து தடை செய்யப்பட்டு செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும் என யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஆலய சுற்று வீதிகள் மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ்ப்பாண மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ்ப்பாண நகரை அடைய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் வசிப்பவர்கள் வாகனங்களை உட்கொண்டு செல்ல யாழ்ப்பாண மாநகர சபையினால் நிபந்தனையுடனான விசேட அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X