2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நல்லூரில் பால் தேநீர் 200 ரூபாய்

Editorial   / 2023 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகத்தில்  ஒரு கோப்பை பால் தேநீர் 

200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா வினை முன்னிட்டு திருநெல்வேலியில் அமைந்துள்ள  சைவ உணவகம் ஒன்று நல்லூர் ஆலயத்திற்கு அருகில் தனது கிளை நிறுவனம் ஒன்றினை   ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற   கொடியேற்ற உற்சவத்துக்கு சென்ற மக்கள் சிலர் அங்கு பால் தேநீர் பருக சென்ற போது  ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாக்கு விற்கப்படுவதாக தெரிவித்தனர்.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் கூட ஒரு கோப்பை பால் தேநீர் இவ்வளவு விலைக்கு விற்கப்படவில்லை என குற்றம் சாட்டும் மக்கள் இவ்வாறு அதிக விலையில் விற்பனை செய்வதை நுகர்வோர் அதிகார சபையினரும் கண்டுகொள்வதில்லை  என குற்றம் சாட்டுகின்றனர்.

சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு குறித்த உணவகத்தின் உணவு பொருட்களின் விலைகள் தொடர்பில்  விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X