2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

நல்லூரானின் திருவிழாவில் பெண் ஒருவரின் மோசமான செயல்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கியை அபகரித்துச் சென்ற பெண் யாழ்.மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த பெண்ணிடம் இருந்து 4 லட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது.

தாயாரிடமிருந்த கைக்குழந்தை அழுததால் தான் பார்ப்பதாக கூறிய மற்றொரு பெண் குழந்தையை வாங்குவதாக பாசங்கு செய்து தாயார் அணிந்திருந்த சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பித்துள்ளார்.

சங்கிலியை பறிகொடுத்த பெண் நல்லூர் உற்சவகால பொலிஸ் பிரிவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, அராலியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .