2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

நண்பியின் பெயரை முகநூலில் பதிவிட்டு, உயிர் மாய்ப்பு

Janu   / 2024 ஜூலை 18 , பி.ப. 01:51 - 0     - 165

தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள செலுத்த முடியாதமையால் மனமுடைந்த குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். 

யாழ்ப்பாணம் , அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் .

இரு பெண்களுக்கு இடையில் நீண்ட கால நட்பு இருந்து வந்துள்ளது. அதில் ஒரு பெண் பண கஷ்டத்தில் இருந்த போது மற்றைய பெண் வங்கியில் பெருந்தொகை பணத்தினை கடனாக பெற்று , தனது நண்பிக்கு பண உதவி செய்துள்ளார். 

பண உதவியை பெற்றுக்கொண்ட பெண் , பணத்தினை மீள செலுத்தாத நிலையில் , வங்கியில் கடன் பெற்ற பெண் , பண நெருக்கடிக்கு ஆளாகி , மனவுளைச்சலில் காணப்பட்டுள்ளார். 

இந் நிலையில் முகநூலில் நண்பியின் பெயரையும் , தனது மரணத்திற்கு காரணம் இவர் தான் என்றும் இவரால் தான் தனது மூன்று பிள்ளைகளையும் அநாதையாக விட்டு செல்வதாகவும் பதிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் .

எம். றொசாந்த் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X