2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

நடமாடும் சேவை

Princiya Dixci   / 2022 மார்ச் 27 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என்பன இணைந்து நடாத்தும் "வீதி ஒழுங்குகளை பேணி பாதுகாப்பாக பயணிப்போம்" எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவை யாழில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் வட மாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுஜிவா சிவதாஸ் தெரிவிக்கையில், “நடமாடும் சேவைகள், ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை வளாக கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

 “போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சு ஆகியோரின் நெறிப்படுத்தலில் இவை நடைபெறவுள்ளன.

“பல ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத பிரச்சினைகளை இனங்கண்டு, தீர்க்கும் நோக்கில், இந்த நடமாடும் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

“வாகன உடமை மாற்றங்கள், வாகன பதிவுப் புத்தகத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளல், வாகனத்தின் நிறைச் சான்றிதழை பெறல், வாகன உடமை மாற்ற படிவங்களை கையேற்றல்,  சாரதி அனுமதிப் பத்திரப் பரீட்சை, விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திரப் பரீட்சை, சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளல் என பல சேவைகள் இதில் இடம்பெறவுள்ளன” என்றார்.

மேலும், “இந்த நடமாடும் சேவை தொடர்பான மேலதிக விவரங்களை பிரதேச செயலகங்களில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவிலும் யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள பிரதி மோட்டார் போக்குவரத்து ஆணையத்திலும் வட மாகாண போக்குவரத்துப் பிரிவிலும் பெற்றுக்கொள்ளமுடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .