2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை

துவிச்சக்கர வண்டிகளை திருடியவர் சிக்கினார்

Janu   / 2024 டிசெம்பர் 22 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - வடமராட்சி பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டிகள் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் சனிக்கிழமை (21) அன்று காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மு.உதயானந் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரணவாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது பல்வேறு பகுதிகளிலும் துவிச்சக்கர வண்டிகளை திருடிய சம்பவங்களுடன் குறித்த நபர் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கமைய 12 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், கைதான சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளையும் நெல்லியடி பொலிஸார் ஊடாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 நிதர்ஷன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X