2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

Freelancer   / 2024 ஜூன் 14 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் பணிப்பின் பிரகாரம் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்குகின்ற நான்கு பொலிஸ் குழுக்கள்  அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது நேற்று (13) அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

"திருநங்கைளை தவறாக சித்தரிக்காதே" என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீட்டில் போடப்பட்டிருந்தது.

தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிஸாரின் தடயவியல் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து தடயங்களை சேகரித்தனர். 

அத்துடன் பொலிஸ் விசேட கைரேகை நிபுணர்கள் பொருட்கள் மற்றும் வாகனங்களை எரிக்க பயன்படுத்திய பெற்றோல் கொண்டுவரப்பட்ட கொள்கலனை கைரேகை பரிசோதனைக்கு உட்படுத்திய போது இருவரின் கைரேகை அடையாளங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தாக்குதல் சம்பவத்தை நடாத்தியவர்கள் 10 லட்சத்துக்கும் பெறுமதியான பொருட்களையும் வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட கும்பல் வீதியூடாக தப்பிச்சென்ற சிசிரிவி காணொளிகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. இவற்றைக் கொண்டு பொலிஸார் பல கோணங்களிலும் விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X