2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

திருட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

Freelancer   / 2022 ஜூன் 05 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

வடமராட்சியில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துன்னாலை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் நெல்லியடி நகரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டிகள் திருட்டு போன சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த குற்றத்தடுப்பு பொலிஸார், திருட்டுப் போய் இருந்த 7 துவிச்சக்கர வண்டிகளை கைப்பற்றியதுடன், சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கடந்த வாரம் நெல்லியடி நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் கத்தி முனையில் அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்து சென்றமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், யாக்கரு பகுதியில் உள்ள வீடொன்றில் தொலைக்காட்சி திருடப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இவர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .