2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

திருடப்பட்டிருந்த மாற்றுத்திறனாளியின் முச்சக்கர வண்டி மீட்பு

Freelancer   / 2022 ஜூன் 09 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், நிதர்சன் வினோத் 

யாழில் மாற்றுத்திறனாளி ஒருவரின் முச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளது. 

யாழ். போதனா வைத்தியசாலை, பின் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மாற்று திறனாளியின் முச்சக்கர வண்டி கடந்த மே மாதம் திருடப்பட்டது. 

இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சமூக வலைத்தளங்கள் ஊடாக திருட்டுப் போன முச்சக்கர வண்டியை கண்டுபிடித்து தருமாறும் கோரியிருந்தார். 

அந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸாருக்கு புதன்கிழமை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , துன்னாலை பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, திருடப்பட்ட முச்சக்கரவண்டியின் இலக்கத் தகட்டை  மாற்றி பாவித்து வந்தமையை கண்டறிந்து அதனை மீட்டனர். 

குறித்த நபர் யாழில் இடம்பெற்ற வேறு சில  முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் பொலிஸார் சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .