2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது நினைவேந்தல்

Freelancer   / 2022 ஜூன் 05 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

தியாகி பொன் சிவகுமாரனின் 48ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் உரும்பிராயில் வலிகாமம் கிழக்குப் பிரதேசசபையினால் இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.

பிரதேசசபையின் அவைத் தீர்மானத்தின் பிரகாரம், இன்று காலை உரும்பிராயில் உள்ள தியாகி பொன். சிவகுமாரன் உருவச்சிலை வளாகத்தில் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில்  அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்த அஞ்சலி நிகழ்வில் பொது ஈகைச் சுடரினை தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது சகோதரி சிவகுமாரி ஏற்றி வைத்தார். 

ஒவ்வொரு வருடமும் பொன். சிவகுமாரன் அவர்களது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் மேற்கொள்வது என பிரதேச சபையில் உறுப்பினர் இ.ஐங்கரனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .