2025 மார்ச் 22, சனிக்கிழமை

தமிழில் டிப்ளோமா பட்டம் பெற்ற பௌத்த துறவி

Freelancer   / 2025 மார்ச் 22 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பௌத்த துறவி ஒருவர் தமிழில் டிப்ளோமா பயின்று பட்டம் பெற்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (21) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது, சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பெயருடைய பௌத்த துறவி ஒருவர், தமிழில் பட்டப்படிப்பின் தகைமைக் கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து பட்டம் பெற்றுள்ளார்.

இந்தக் கற்கை நெறியை உயர் பட்டப்படிப்புகள் பீடம் நடத்தியது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவால்  சம்பிரதாயபூர்வமாக இவருக்கு பட்டம் வழங்கப்பட்டது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X