2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

தப்பிச்சென்றவர் போதைபொருளுடன் கைது

Mayu   / 2024 ஜூன் 17 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கிளிநொச்சி அக்கராயன் காட்டுப்பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்தபோது குறித்த நபர் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை (17) கைதுசெய்யப்பட்டார்.

இதன்போது குறித்த நபரிடமிருந்து 3,800 கி.கிராம் ​ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதுடன்இ மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் குறித்த நபர் ஒப்படைக்கபட்டார்.

இவர் யாழ் மாவட்டத்தில் பல குற்றச்செயல்களுக்காக நீதிமன்றங்களினால் திறந்த பிடியாணை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதம் 12ம் திகதி குறித்த கைதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார். இதன் காரணமாக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிதர்ஷன் வினோத் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X