2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தபாலக ஊழியர் மீது தாக்குதல்

Freelancer   / 2022 நவம்பர் 28 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை பார்வையிடச் சென்றபோது, வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து தன்னைத் தாக்கியதாக, யாழ்ப்பாண தபாலாக ஊழியர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் ஊழியர், யாழ். பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமது தாயாரை பார்ப்பதற்காக தாக்குதலுக்கு இலக்கானவரும், மற்றுமொருவரும் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். 

இதன் போது ஒருவர் மட்டுமே வைத்தியசாலை விடுதிக்குள் சென்று நோயாளரை பார்வையிட முடியும் என பாதுகாப்பு உத்தியோகத்தரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்போது, " ஏன் பாரபட்சமாக நடக்கிறீர்கள் - வேறு நோயாளியை பார்ப்பதற்கு ஒரே நேரத்தில் சில பார்வையாளர்களை அனுமதித்தீர்களே?" என நோயாளியை பார்க்கச் சென்றவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

இதன்போது இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படவே ஒன்று கூடிய வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடாத்தினர் என தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .