Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2022 மே 04 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதாக நெருக்கடி காரணமாக புதிதாக இலங்கையில் இருந்து வந்தவர்களுக்காக தான் குடியிருந்த வீட்டை அபகரித்து, தனது உடைமைகளை வெளியில் வீசியதாகக் கூறி, இலங்கைப் பெண்ணொருவர், மண்டபம் அகதிகள் முகாம் வாசலில் நேற்று (03) நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இறுதிக்கட்ட போரின் போது இடம்பெயர்ந்த 450 குடும்பத்தைச் சேர்ந்த 1,419 இலங்கையர்கள், மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கின்றனர். மண்டபம் அகதிகள் முகாமில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து வரக்கூடியவர்களைத் தங்க வைப்பதற்காக 147 வீடுகள் புனரமைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வவுனியாவிலிருந்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அகதியாக வந்த ராசிய பேகம் என்பவரின் குடும்பத்தினர் வசித்து வரும் வீடு முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் பக்கத்தில் உள்ள வீட்டை சொந்த செலவில் புனரமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
அந்த வீட்டை திங்கட்கிழமை (02) வந்த ஐந்து இலங்கையர்களுக்கு ஒதுக்கி, இவரை குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் இருந்த பொருட்களை அகற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பெண் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாம் வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும், மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாம் தனி ஆட்சியர் தொடர்ந்து இலங்கை முகாம்களில் வசிக்கும் மக்களிடம் இலஞ்சம் கேட்பதாகவும் பணம் தராததால் முன்விரோதம் காரணமாக தங்களை அந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டதாகவும், பல வீடுகள் இன்னும் புனரமைக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ள வீடுகளை ஒதுக்காமல் தங்களது வீட்டை மட்டுமே ஒதுக்கி குழந்தைகளுடன் வெளியே அனுப்பியதாக அப்பெண் குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை, தனி வீடு மற்றும் தனிப் பதிவு கேட்டு, மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் 3 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாரை திங்கட்கிழமை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago