2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

தடையை மீறி யாழில் போராட்டம்

Niroshini   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-எம்.றொசாந்த் 
 
நாட்டின் 73ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை (04), வடக்கு, கிழக்கில் கரிநாளாக கடைப்பிடிக்குமாறு, காணாமல் ஆக்கப்பட்டோரது  உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்று, யாழ்ப்பாணத்தில் கறுப்புப்பட்டிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 
 
இந்தப் போராட்டம், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்றைய தினம் காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, போராட்ட இடத்துக்கு வருகை தந்த யாழ்ப்பாணப் பொலிஸார், நீதிமன்றத் தடை உத்தரவை வாசித்துக் காண்பித்து, போராட்டத்தை முன்னெடுக்க முடியாது எனத் தெரிவித்துடன், அனைவரும் கலைந்து செல்லுங்கள் என கடும் தொனியில் எச்சரித்தனர். 
 
 எனினும், நீதிமன்றக் கட்டளையில் பெயர் குறிப்பிடப்பட்ட எவரும் 
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருக்காத்தால், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பொலிஸாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்தனர்.

அதனால் போராட்டத்தைத் தடுக்க பொலிஸார் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும், உறவுகள் தமது போராட்டத்தைத்  தொடர்ந்து முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .