2025 மார்ச் 31, திங்கட்கிழமை

தங்கச் சங்கிலி அபகரிப்பு ; ஒருவர் கைது, மற்றையவருக்கு ​வலை

Janu   / 2025 மார்ச் 05 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வல்லை வெளிப்பகுதியில் பெண்ணொருவரின்  தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில் புதன்கிழமை (05) காலை பயணித்த பெண்ணொருவரின் தங்க நகையை, உயர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்  அபகரித்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சாவகச்சேரிப் பகுதியில் வைத்து  மோட்டார் சைக்கிள் மற்றும் நகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றையவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .

கைதான சந்தேக நபரை வியாழக்கிழமை (06) அன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நெல்லியடி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X