2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

டெங்கு ஒழிப்பில் பறிபோகும் மூலிகைகள்

Niroshini   / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எம்.றொசாந்த்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, மூலிகை செடிகளையும் அழிக்கப்படுவதாக, சித்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, பற்றை காடுகளும் அழிக்கின்றன எனவும் இதன்போது, அங்குளரள மூலிகை செடிகளும் அழிக்கப்படுகின்றன எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். 

அதனால் மூலிகை செடிகள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட அவர், மூலிகை செடிகளை அடையாளம் காண உரியவர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் அதன் ஊடாகவே, மூலிகை செடிகளை அழியாது காக்க முடியுமெனவும் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .