2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

டிப்பர் சாரதிகள் இருவர் கைது

Princiya Dixci   / 2022 மார்ச் 14 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில் நட்டாங்கண்டல் முறையற்ற அனுமதியை பயன்படுத்தி மணல் ஏற்றி  சென்ற இரு டிப்பர்களின் சாரதிகள், பொலிஸ் காவலரண் பகுதியில் வைத்து நேற்று (13) மாலை நட்டாங்கண்டல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சாரதி இருவரும், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் நாளை மறுதினம் (16) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  நட்டாங்கண்டல் பொலிஸார் தெரிவித்தனர்.

மாந்தை கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்தும் மணல் வளங்கள் அகழப்பட்டு, ஏற்றப்படுகின்றன என்று, பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பொதுமக்களால்  குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில்,  இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .