Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை
Editorial / 2024 மார்ச் 16 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன், பு.கஜிந்தன்
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டை எதிர்த்து தனிநபர் ஒருவர் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
குறித்த போராட்டமானது இன்றையதினம் (16.03.2024) கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தியின் மாநாடு நடைபெறும் மண்டபத்திற்கு எதிரே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர் ஏந்தியுள்ள பதாதைகளில் 'இணைந்த வடக்கு கிழக்கை நீதிமன்றம் வரை சென்று பிரித்த பெருமை ஜேவிபியையே சாரும்' மற்றும் 'சொந்த இனத்தையே அழித்த ஜேவிபி எங்கள் இனத்துக்கு எவ்வாறு தீர்வு தரும்' போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராஜ் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.
மக்கள் சந்திப்பு இடம்பெற்ற பகுதியை அண்மித்து A-9 வீதியில் இவ்வாறு அவர் பதாதைகளை கட்டி எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
11 Apr 2025