2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஜப்பான் தூதுவ அதிகாரி - யாழ். பல்கலைக்கழக மாணவர் சந்திப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி. நிதர்ஷன்

ஜப்பான் தூதுவராலய அதிகாரி, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரை, நேற்று (28) சந்தித்தார். 

கலைப்பீட மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், ஜப்பானிய தூதுவராலயத்தின் அரசியல் ஆய்வாளர் ஹனா கலந்துகொண்டிருந்தார். 

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமிழ் மக்கள் மத்தியில் வடக்கு, கிழக்கு சார் பொதுஜன வாக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், வடக்கு, கிழக்கு தழுவிய திட்டமிட்ட பௌத்தமயமாக்கல், திட்டமிட்ட நிலஅபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர், மகாவலி அபவிருத்தித் திட்டமும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கமும், மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரவை பிரச்சினைகள் மற்றும் தமிழ் மாணவர் சமூகத்தின் மீதான அரச அடக்குமுறைகள் என பலதரப்பட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஜப்பானிய தூதுவராலய அரசியல் ஆய்வாளர் ஹனா, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சில்வஸ்டார் ஜெல்சின், உப தலைவர் இரா தர்ஷன் மற்றும் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் என பலரும் இதில் கலந்துகொண்டனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .