Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 14 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
மலரும் "சுபகிருது" வருட தமிழ் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சித்திரையே வா நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா” என்று சொல்லும் மரபு காணப்படுகிறது இதன்மூலம் சித்திரையின் சிறப்பினை காணலாம்.
நாட்டில் ஏற்பட்ட கொவிட் தாக்கம் அதன் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அனைவருடைய வாழ்க்கையிலும் பல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையில் இருந்து நாட்டை மீட்பது அனைவருடைய கடமையாகும்.
ஆகவே மலரும் சித்திரை புத்தாண்டில் இருந்து மக்களுடைய அனைத்து துன்பங்களும் நீங்கி நாடு அபிவிருத்தியை நோக்கி முன்னேற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக என்று தெரிவித்தார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago