2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சு. க பேரணியில் வாள்வெட்டு குழுவினர்; ஒருவர் கைது

Niroshini   / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழில், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கலந்துகொண்ட வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு , ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில், யாழில், நேற்றைய தினம் (04) பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இந்நிலையில், வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், பொலிஸாரால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த இருவர், குறித்த பேரணியில் கலந்து கொண்டுள்ளதாக, யாழ்ப்பாணக் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது. 

அதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்,  பேரணியில் கலந்துகொண்ட இருவரையும் கைதுசெய்வதற்கு முயற்சித்த போது, ஒருவர் தப்பி சென்றுள்ளார். இதையடுத்து, மற்றைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .